குழந்தைகளுக்கு விஷ ஊசிப் போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்
ஈரோட்டில் இரண்டு குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் வீரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3ம் வகுப்பு படிக்கும் பிரனித், மற்றும் 4 வயதில் சதீஸ் என இரு மகன்கள் உள்ளனர். ஸ்ரீஜாவின் கணவர் ரவீந்தரன் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், ஸ்ரீஜாவிற்கு தன்னுடன் பணிபுரியும் ரஞ்சித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஞ்சித் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீஜா, நேற்று நள்ளிரவு தனது இரு மகன்களுக்கும் விஷ ஊசிப் போட்டு கொலை செய்துவிட்டு, தானும் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்னர் ஸ்ரீஜா, எழுதிய கடிதத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்