விக்னேஷின் தாயார்
விக்னேஷின் தாயார் முகநூல்

”இதய நோயாளிஎன தெரிந்தும் என் மகனை டாக்டர் எட்டி உதைத்தார்”-விக்னேஷின் தாயார் காவல்நிலையத்தில் புகார்

சென்னையில் மருத்துவரை தாக்கிய இளைஞர் விக்னேஷின் தாயார் தரப்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் நேற்று முன் தினம் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், விக்னேஷுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷின் மீது 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இளைஞர் விக்னேஷின் தாயார் தரப்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், சம்பவத்தின்போது விக்னேஷை அங்கிருந்தவர்கள் தாக்கியவதாகவும், அவர் இதய நோயாளி எனத்தெரிந்தும் காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விக்னேஷை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞரின் தாயார் புகார் மனுவை, அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்தில் அளித்தார்.

விக்னேஷின் தாயார்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | கொட்டிய தீர்த்த கனமழை To எலி மருந்தால் உயிரிழந்த 2 குழந்தைகள்!

கிண்டி மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com