காயமடைந்த தாய் யானை... வனத்துறையினரை துரத்தும் குட்டியானை

காயமடைந்த தாய் யானை... வனத்துறையினரை துரத்தும் குட்டியானை

காயமடைந்த தாய் யானை... வனத்துறையினரை துரத்தும் குட்டியானை
Published on

பழனி அருகே, காயமடைந்த நிலையில் விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானையை, 4 வயது குட்டியானை நெருங்க விடாமல் தடுத்தது.  

பழனி, புளியம்பட்டி பகுதியிலுள்ள தோட்டத்தில், நடக்க இயலாத நிலையில் காட்டு யானை ஒன்று விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ளது. காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சித்தனர். ஆனால் தாய் யானையின் அருகே நிற்கும் 4 வயதுடைய குட்டியானை, வனத்துறையினரை அருகில் வரவிடாமல் துரத்தியது.

இதனால் யானை‌யின் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.மேலும் குட்டியானையின் இந்த நெகிழ்ச்சியான பாசத்தை கண்ட வனத்துறையினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதனையடுத்து  துப்பாக்கி மூலம் வெடித்து குட்டி யானை விரட்டப்பட்டது. மேலும் காயமடைந்த யானைக்கு சிகிச்கை அளிக்கப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com