ஏ.சி.யில் வாயுக்கசிவு: தாய், தந்தை, 8 வயது மகன் பரிதாப உயிரிழப்பு

ஏ.சி.யில் வாயுக்கசிவு: தாய், தந்தை, 8 வயது மகன் பரிதாப உயிரிழப்பு
ஏ.சி.யில் வாயுக்கசிவு: தாய், தந்தை, 8 வயது மகன் பரிதாப உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் ஏசியில் மின்கசிவால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி தாய், தந்தை, 8 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

கோயம்பேட்டைச் சேர்ந்த சரவணன், தனியார் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு சரவணன், அவரது மனைவி கலையரசி, 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டில் ஏ.சி. போட்டு உறங்கியுள்ளனர். விடிந்து வெகுநேரம் ஆகியும் சரவணன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சரவணன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சோதித்த போது 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. ஏ.சி.யில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவே மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்திருப்பது சுற்று வட்டாரத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com