வங்கி அலாரத்தை இழுத்த குரங்கு: கொள்ளை என பொதுமக்கள் பீதி

வங்கி அலாரத்தை இழுத்த குரங்கு: கொள்ளை என பொதுமக்கள் பீதி

வங்கி அலாரத்தை இழுத்த குரங்கு: கொள்ளை என பொதுமக்கள் பீதி
Published on

இந்தியன் வங்கியின் எச்சரிக்கை அலாரத்திற்கு செல்லும் மின்வயரை குரங்கு பிடித்து இழுத்ததால் எச்சரிக்கை மணி 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து ஒலித்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ளது இந்தியன் வங்கி கிளை. இன்று காலை இந்த வங்கியில் எச்சரிக்கை மணி 30 நிமிடங்களுக்கு மேல் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்துவிட்டனரா? என மக்கள் அச்சமடைந்தனர். இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவலும் சென்றது.

ஆனால் வங்கி ஊழியர்கள் வந்து சோதனையிட்டதில், எச்சரிக்கை அலாரத்திற்கு செல்லும் மின்வயரை குரங்கு பிடித்து இழுத்ததால் அலாரம் அடித்தது தெரியவந்தது. அதன் பின் இணைப்பை ஊழியர்கள் சரி செய்தனர். ஒருவாரத்தில் 2வது முறையாக இதுபோன்ற சம்பவம் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com