\
தெருவோர டிபன் கடை நடத்தும் ஏழை பெண்ணுக்கு தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்த அமைச்சர்

தெருவோர டிபன் கடை நடத்தும் ஏழை பெண்ணுக்கு தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்த அமைச்சர்

தெருவோர டிபன் கடை நடத்தும் ஏழை பெண்ணுக்கு தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்த அமைச்சர்
Published on

தெருவோரம் டிபன் கடை நடத்திவந்த பெண்ணுக்கு பால்வளத்துறைத் அமைச்சர் சா.மு.நாசர் தள்ளு வண்டி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர், சாலையோர கடைகளில் உணவு அருந்துவது வழக்கம். அப்படி திருவேற்காடு பகுதியில் ஒரு பெண் நடத்திவந்த சாலையோரக் கடையில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது தள்ளுவண்டி உடைந்து இருப்பதை கண்ட அவர், வெற்றிபெற்று அமைச்சரான பிறகு அதை ஞாபகம் வைத்து புதிய தள்ளுவண்டியை அந்த பெண்ணிற்கு பரிசாக வழங்கினார். அமைச்சர் தள்ளுவண்டி கடைக்கு வருவதையே நம்ப முடியாத அந்த பெண் கண்ணீர் மல்க தள்ளுவண்டியை பெற்றுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com