புயல்புதியதலைமுறை
தமிழ்நாடு
காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு இருக்கிறது? எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட்
பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது இன்னும் சிலமணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது. இன்னும் சிலமணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டை கேரளாவைக் கடந்து அரபிக்கடலை அடைந்தாலும், அங்கு மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், இது கடந்து செல்லும் பாதை எங்கும் மழை மற்றும் கன மழையைக்கொடுத்து செல்வதால், மேற்குத்தொடர்ச்சிமலை மர்றும் அதை ஒட்டிய அணைப்பகுதி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றனர்.