இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு: 5வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு: 5வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு: 5வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on
கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கில் ஐந்தாவது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முகமது ரபீக் ஹசன், கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவதாக கைது செய்யப்பட்ட முகமது ரபீக் ஹசன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com