"காவல் துறையினருக்கு 10% ஊதிய உயர்வினை பரிசீலித்திடுக" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"காவல் துறையினருக்கு 10% ஊதிய உயர்வினை பரிசீலித்திடுக" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
"காவல் துறையினருக்கு 10% ஊதிய உயர்வினை பரிசீலித்திடுக" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
காவல் துறையினருக்கு குறைந்தபட்சம் பத்து விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற காவலர் தொடர்ந்த வழக்கில், 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழ்நாடு காவல்துறையினரின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்; காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் தற்போது பணியில் உள்ளவர்கள் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் இருப்பதாகக் கூறினர். காவல்துறையினரின் பணி மகத்தானதாகும், இதனை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது எனக் குறிப்பிட்டனர். ஆகவே, அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவிகிதம் கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இனிவரும் காலங்களில் காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, 3 ஷிப்ட்டுகளில் காவல் துறையினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட காவல் துறையினருக்கான ஆணையத்தை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com