ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை!
Published on

தஞ்சை பெரிய கோயிலில் நடக்கவிருந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கோயிலை ஒட்டி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் பகிரப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இது தமிழக பாரம்பரியத்தை சிதைக்கும் செயல் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கோவிலில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனியார் அமைப்புகளுக்கு கோவிலுக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினால் கோவிலின் பாரம்பரியம் பாழாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் தஞ்சை பெரியகோயிலில் இன்று மாலை தொடங்கவிருந்த 2 நாள் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்பதை ஆட்சியர்,எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும் என்றும்  கோயில் வளாகத்தில் பந்தல்கள், இருக்கைகள் அகற்றப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com