அரசு மருத்துவர் பணியிடமாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை

அரசு மருத்துவர் பணியிடமாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை

அரசு மருத்துவர் பணியிடமாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை
Published on

அரசு மருத்துவர் பணியிடமாற்ற கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை மருத்துவ பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 860 மருத்துவ பணியாளர்களை கட்டாய பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என மருத்துவ இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியது. 

860 மருத்துவர்கள் கட்டாயமாக பணிடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை அரசு மருத்துவர்கள் சேர்ந்து ஒரே வழக்காக தொடர்ந்திருந்தனர். அதில், விதிகளை பின்பற்றாமல் மூத்த மருத்துவர்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும் ஜூனியராக பணியாற்றும் மருத்துவர்கள் அதே இடத்தில் நீக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் புகார் தெரிவித்திருந்தனர். 

எனவே மூத்த மருத்துவர்களை கலந்தாய்வு செய்து பணியிடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்து வழக்கை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com