உடுமலை சங்கர் படுகொலை தொடர்பான வழக்குகள்: இன்று தீர்ப்பு!!

உடுமலை சங்கர் படுகொலை தொடர்பான வழக்குகள்: இன்று தீர்ப்பு!!

உடுமலை சங்கர் படுகொலை தொடர்பான வழக்குகள்: இன்று தீர்ப்பு!!

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015-ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக உடுமலைபேட்டை டி.எஸ்.பி. மேற்கொண்ட விசாரணையில் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்பாட்டில்தான் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது தெரிய வந்தது.அதனடிப்படையில், கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு, செய்யப்பட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இதனைத்தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்ய கோரும் நடைமுறைப்படி, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்தனர்.

 இந்த அனைத்து வழக்குகள் மீதும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விரிவான விசாரணை நடத்தினர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், அனைத்து வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com