பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு படத்தை வெளியிடாததற்கு பா.ரஞ்சித் அதிருப்தி

பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு படத்தை வெளியிடாததற்கு பா.ரஞ்சித் அதிருப்தி
பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு படத்தை வெளியிடாததற்கு பா.ரஞ்சித் அதிருப்தி

ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு இயக்குனர் பா. ரஞ்சித் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் நீயா ஒளி பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலின் பாடகர்களில் ஒருவருமான தெருக்குரல் அறிவின் படம் அதில் இடம் பெறவில்லை. அவரது படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தெருக்குரல் அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com