பட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்

பட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்
பட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வீட்டிலேயே, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பட்ஜெட்டில் ஏசி ஒன்றை கோவை பட்டதாரி ஜெகதீஷ் என்பவர் தயாரித்துள்ளார். 
 
‘வெயிலோடு விளையாடி.... வெயிலோடு உறவாடி’ என்பதெல்லாம் பாடல் வரிகளுக்கத்தான் சரியாக உள்ளதே தவிர, நடைமுறையில் பெரும்பாலும் யாருக்கும் அது பொருந்துவதில்லை. தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் அடிக்கும் வெயிலிலிருந்தும், வீசும் அனல் காற்றிலிருந்தும் தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் ஏசியை பெரிதும் நாடுகின்றனர். ஆனால், ஏசியை வாங்க வசதியில்லாதவர்களுக்காக மலிவு விலையில் புதுவிதமான ஏசியைத் தயாரித்துள்ளார் பட்டதாரி இளைஞர் ஜெகதீஷ்.

கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், தனது மகளுக்கு வெயிலின் காரணமாக ஏற்பட்ட நோயில் இருந்து பாதுகாக்க ஏசியை வாங்க முயற்சித்து உள்ளார். ஆனால் விலை அதிகமாக இருந்ததால் தானே ஒரு வில்லேஜ் ஏசியை உருவாக்கி உள்ளார். 

பேன், பானை, சிறு மின் மோட்டார், பிவிசி பைப், என எளிய பொருட்களால் வீட்டிலேயே ஏசியை உருவாக்கி  உள்ளார். நீரில் பட்டு வரும் காற்று குளிச்சி தரும் என்ற எளிய அறிவியல் அடிப்படையில், கூழாங்கல், பானை, வெட்டிவேர், தண்ணீர், உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் உருவாக்கி உள்ளார். இந்த வில்லேஜ் ஏசி அறைக்குள் இருக்கும் சூடான காற்றை உள்ளிழுத்து, குளிர்ந்த காற்றை வெளியேற்றும் என்றும் இந்த ஏசியால் எந்த பிரச்னைகளும் ஏற்படாது எனவும் ஜெகதீஷ் கூறுகிறார். 

தனது வீட்டிலிருந்த இந்த வில்லேஜ் ஏசியை பார்த்துவிட்டு அருகிலிருந்தவர்களும் கேட்டு வருவதால் அவர்களுக்கும் தயாரித்து கொடுத்து வருகிறார். தற்போது இதற்கு  காப்புரிமை (copyrights) பெற முயற்சித்து வருவதாகவும் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com