தமிழ்நாடு
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாடமாக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாடமாக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த பாடத்தை, பாடத்திட்டத்தில் சேர்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச்சேர்ந்த முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களும், பிற மாணவர்களுக்கு சமமாக கல்வி பெறுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் நடத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.