மாணவி எழுதிய கடிதம்
மாணவி எழுதிய கடிதம்pt desk

’ராணுவ அதிகாரியாக வர வேண்டும்’ உயர்ந்த லட்சியம்.. மதுரை மாணவி எழுதிய கடிதமும் ஜனாதிபதியின் பதிலும்!

ராணுவ அதிகாரியாக வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என மதுரை மாணவி எழுதிய கடித்தத்திற்கு, உயர்ந்த லட்சியம் பாராட்டுகள் என்று ஜனாதிபதி முர்மு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
Published on

செய்தியாளர்: பிரசன்னா

மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி அழகு யாழினி, தனது லட்சியம் ராணுவ அதிகாரியாக வர வேண்டும் என்பதே என்று தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், ஒரு பெண்ணாக நான் பெருமைபடுகிறேன். ஏனெனில் நம் நாட்டிற்கு பெண், ஜனாதிபதியாக இருக்கிறார். எனது உண்டியல் சேமிப்பு பணத்திலிருந்து உங்களுக்காக ஒரு புடவையை வாங்கினேன். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடவும் மக்களைக் காப்பாற்றவும் ராணுவத்திற்கு உத்தரவிடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மாணவி எழுதிய கடிதம்
வரலாறு காணாத வெள்ளத்தில் சீனா...சாலைகள் ஆறாக மாறிய காட்சிகள்!

இந்த குழந்தையின் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தை பெரிதும் நெகிழ வைத்துள்ளது. அதற்காக, குடியரசுத் தலைவர் முர்மு, யாழினிக்கு பதில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆந்த கடித்தத்தில், ஜனாதிபதி, உங்களது கடிதத்தை பெரிதும் பாராட்டுகிறார். உங்கள் நாட்டுப்பற்றும் உயர்ந்த இலட்சியமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார் என தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அனுப்பியுள்ள இந்த பதில் கடிதம் மாணவியை உற்சாகத்தி, நம்பிக்கையையும், ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com