\
நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை - அச்சத்தில் கிராமமக்கள்

நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை - அச்சத்தில் கிராமமக்கள்

நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை - அச்சத்தில் கிராமமக்கள்
Published on

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவிந்தப்பேரியில், வயலில் காவலுக்கு கட்டிப் போட்டிருந்த நாயை சிறுத்தை அடித்துக் கொன்றதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பகவதி என்பவர் தனது வ‌யலில் பயிரிட்டுள்ள நெற்பயிரை காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பற்றுவதற்காக நாயை காவலுக்கு கட்டியிருந்தார். இந்நிலையில், இந்த நாயை நேற்று இரவு சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. இதனால், சிறுத்தையின் அட்டகாசம் தொடர்வதாகவும், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com