மெர்சல் பார்ப்பதற்காக லேப்டாப் வழங்கவில்லை: தம்பிதுரை

மெர்சல் பார்ப்பதற்காக லேப்டாப் வழங்கவில்லை: தம்பிதுரை

மெர்சல் பார்ப்பதற்காக லேப்டாப் வழங்கவில்லை: தம்பிதுரை
Published on

பிக் பாஸ் பார்ப்பதற்கும், மெர்சல் திரைப்படம் பார்ப்பதற்கும் விலையில்லா லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்று ஆயிரத்து 391 மாணவ, மாணவிகளுக்கு அதை வழங்கினார். அப்போது மாணவர்களின் மத்தியில் பேசிய அவர், பிக் பாஸ் பார்ப்பதற்கும், மெர்சல் திரைப்படம் பார்ப்பதற்கும் விலையில்லா மடிக்கணிணிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் மாணவ- மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com