தமிழ்நாடு
கோடநாடு எஸ்டேட் மேலாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்
கோடநாடு எஸ்டேட் மேலாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்
கோடநாடு கர்சன் எஸ்டேடின் பொதுமேலாளர் நடராஜன் இன்று கோவை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான கர்சன் கிரீன் டீ எஸ்டேட்டில் கடந்த ஆறு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கர்சன் எஸ்டேட் மேலாளர் நடராஜன், இன்று கோவை வரிமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சசிகலாவின் அண்ணன் மகன் மருத்துவர் வெங்கடேஷூம் இன்று சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.