பேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி

பேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி

பேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி
Published on

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக் கூடாது என்ற உத்தரவை மீறியவர்களை தடுக்காத அரசுக்கு எதிராக வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் கட்அவுட், பேனர்களில் இடம் பெற தடை விதித்து அக்டோபர் 23ஆம் தேதி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், உயிரோடு இருப்பவர்களின் படத்தையும் வைத்து பேனர் மற்றும் கட்-அவுட் ஆகியவற்றை வைத்ததாக டிராபிக் ராமசாமி புகார் தெரிவித்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய அதிமுகவினரை , தடுக்காத தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com