தமிழ்நாடு
திருமணமான காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலன் கைது
திருமணமான காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலன் கைது
வானூர் அருகே காதலியை அவரது காதலனே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தில் வசிப்பவர் ராஜசேகர் என்கின்ற ஜெகன். இவருக்கு 32 வயதாகிறது. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு ஏதோ கருத்து வேறுபாடு உருவாக இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது. சில மாதங்களுக்கு முன் ராஜசேகர் தனது முன்னாள் காதலியைச் சந்தித்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பழக்கத்தால் கர்ப்பமான அந்தப் பெண் ராஜசேகரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் இதற்கிடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்பு மண்ணெண்ணெய் ஊற்றி அப்பெண்ணை தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணைச் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வானூர் போலீசார் ஜெகனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.