“இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள்” - துரைமுருகன் பேச்சு

“இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள்” - துரைமுருகன் பேச்சு
“இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள்” - துரைமுருகன் பேச்சு

 43 ஆண்டுகளில் பேராசிரியருக்கும் கலைஞருக்கும் எந்தக் கருத்து மாறுபாடும் ஏற்படவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் கடந்த வாரம் (98) காலமானார். அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதனையடுத்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் க.அன்பழகனின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், “எங்கள் இதயத்தின் சுமை இரங்கவில்லை. இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள். இங்குள்ள தலைவர்கள் எங்கள் தலைவருக்கு ஆதரவாக பேசியது இதய சுமை குறைந்து போல் இருக்கிறது.


பொதுக்குழுவில் பேராசிரியர் பேசிய பேச்சுகள் பலரின் அமைச்சர் பதவியை பறித்து இருக்கிறது. அவரின் பேச்சுக்கு யாரும் எதிர்ச்சொல் கூற முடியாது. அவர் பொதுச் செயலாளராக இருந்த 43 ஆண்டுகளில் அவருக்கும் கலைஞருக்கும் எந்தக் கருத்து மாறுபாடும் ஏற்படவில்லை.ஸ்டாலின்தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர் பேராசிரியர்” என்றார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும் போது, “சிலர் குதிரைகளை கொண்டு வந்து காட்டினார்கள் அந்த குதிரை பொய்க்கால் குதிரை என்பது நமக்கு தெரிந்துவிட்டது. என்றைக்கும் பேராசிரியர் மறையவில்லை, நம்முடன் தான் இருக்கிறார். நமது இரத்தத்தில், நரம்புகளில் நம்முடன் பிணைந்து இருக்கிறார். தன்மானத்தை விட இனமானம் தான் பெரியது. அதற்கு ஏற்றார் போல் வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர். எந்தப் பதவியையும் அவர் தேடவில்லை. எல்லா பதவிகளும் அவரைத் தேடி வந்தது. இது வீரவணக்க நாள் அல்ல; நம் லட்சியத்தை நோக்கி வெற்றியை நோக்கிச் செல்லும் நாள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com