மனைவி உறவுக்கு வரமறுத்ததால் தீக்குளித்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(34). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலை முடித்து குடித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி பூங்கொடியை(30) உறவுக்கு அழைத்துள்ளார். பூங்கொடி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூங்கொடி கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சலை கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் சந்திரனை மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்டவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்30 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மறுத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.