மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவருக்கு நேர்ந்த கொடுமை

மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவருக்கு நேர்ந்த கொடுமை

மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவருக்கு நேர்ந்த கொடுமை
Published on

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற முயன்றபோது, கணவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகேயுள்ள பெருமாள்மலை கரும்பாறை பகுதியில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் முருகன். அவரது மனைவி லோகாம்பாள் இன்று காலை இப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க இறங்கியபோது கிணற்றில் வழுக்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் முருகன் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றபோது அவரும் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புப்படையினர் சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பின் லோகாம்பாள் மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். தண்ணீர் பிடிக்கச்சென்ற கணவன் மனைவி கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com