கந்தூரி விழா
கந்தூரி விழாpt desk

கந்தூரி விழா: சீர்வரிசை கொண்டுவந்த இந்துக்கள் - அன்போடு வரவேற்று விருந்து வைத்த இஸ்லாமியர்கள்!

அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற கந்தூரி விழா, இந்து சமுதாய மக்களின் சீர்வரிசையோடு மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.
Published on

செய்தியாளர்: நவநீத கணேஷ்

அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா, மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது. நாடார்கள் உறவின்முறை அலுவலகத்தில் இருந்து இந்து சமுதாய மக்கள் கந்தூரி விழாவை முன்னிட்டு வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர். மத நல்லிணக்க அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்து சமுதாய மக்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்று சீர்வரிசையை பெற்றுக் கொண்டனர்.

சீர்வரிசை
சீர்வரிசைpt desk

இதைத் தொடர்ந்து பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பின்னர், அனைவருக்கும் கந்தூரி விருந்து அளிக்கப்பட்டது. இந்த பள்ளிவாசலுக்கு, இந்து சமுதாய மக்கள் சீர்வரிசை கொண்டு வந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கந்தூரி விழா நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி ஏ.எஸ்.பி கருண் கரட், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com