நீர்நிலைகளை மீட்டெடுங்கள்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளை மீட்டெடுங்கள்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளை மீட்டெடுங்கள்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய 3 நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களின் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், சென்னை அடையாற்றின் கரையோரங்களில் துர்நாற்றம் வீசுவதே இதற்கு உதாரணம் என நீதிபதிகள் கூறினர். இயற்கை எழில் மிகுந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம் என்பதால், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வதாகக் தெரிவித்தனர்.

சென்னை கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை புனரமைத்து பழைய நிலைக்கு மீட்டுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்நிலைகளைப் புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நீர்நிலைகளை மீட்டுக்க தேவைப்பட்டால் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினர். நீர்நிலைகளை மீட்டெடுக்க தனியார் மற்றும் பொதுமக்கள் முன்வந்து நிதி அளித்தால், அதற்கு வரி விலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கும்படியும், நகர்ப்புறங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். நீர்நிலைகளை புனரமைப்பது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும், நீர்நிலைகளை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com