டிஜிபி ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

டிஜிபி ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
டிஜிபி ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

அரசிடம் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனை வாங்கியதில் முறைகேடு செய்ததாக டி.ஜி.பி. ஜாபர் சேட்டுக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

திமுக ஆட்சி காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ்.அதிகாரி எம்.எஸ்.ஜாபர்சேட், தற்போது சிபிசிஐடி பிரிவின் டி.ஜி.பி.-யாக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி உள்பட பலருக்கு அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனை ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஜாபர்சேட் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் முறைகேடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


ஜாபர்சேட் ஐ.பி.எஸ்.அதிகாரி என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் முறையான அனுமதியை தமிழக அரசு பெறவேண்டும். ஆனால் எந்த அனுமதியையும் பெறாமலேயே சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் ஜாபர்சேட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்ததுள்ளோம் என காவல்துறை தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்தையடுத்து சிறப்பு நீதிமன்றம் அந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது.இருப்பினும் ஜாபர்சேட் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது.

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாபர்சேட் 2016ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு என்னுடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவு நகலை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், இதுவரை நீதிபதி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, எனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில் ஜாபர் சேட் மற்றொரு புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், தனக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற நடைமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். மேலும் 2016 வழக்கை திரும்ப பெற தயாராக இருப்பதாகவும் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை கால அமர்வில் நீதிபதி ராஜமாணிக்கம் முன் கடந்த மே 23ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே, குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும்; ஆனால், அனுமதியில்லாமலேயே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரியை கீழமை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது, நீதிமன்ற விசாரணையை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகி விடும் என கூறி சிறப்பு நீதிமன்ற நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர்சேட் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி 2016ல் தொடரப்பட்ட மனு மற்றொரு வழக்கு நீதிபதி முன் நிலுவையில் உள்ளதால், ஜூன் மாதம் அதே நீதிபதியை அணுகி வாபஸ் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.இதன் மூலம் வரும்கால தமிழகத்தின் "சென்ட்ர் ஆப் தி பவராக" (டிஜிபியாக) ஜாபர்சேட் மாற இருக்கிறார் என காவல்துறை அதிகாரிகள் முனுமுனுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com