\
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!
Published on

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு அமைச்சர் துரைக்கண்ணு(72) கடந்த 13 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உள் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com