ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டு
ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுpt desk

அரசு பேருந்தில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டு

அரசு பேருந்தில் பயணி தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு இயக்கப்படும் நகர பேருந்தில், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது தன் கையில் அணிந்திருந்த தங்க செயின் கீழே தவறவிட்டுள்ளார். இதனை அறியாத அந்தப் பெண் பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்குச் சென்ற நிலையில், கையில் அணிந்திருந்த செயினை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடத்துநர்
நடத்துநர்pt desk
ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டு
சொந்த இடத்தை தானமாகக் கொடுத்தும் சாலை அமைத்துத்தராத நிர்வாகம் - மாணவர்கள் அவதி

இதையடுத்து அந்தப் பேருந்தின் ஓட்டுநர் குமார் என்பவரை போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஓட்டுநர் செயின் கீழே கிடந்தது அதை எடுத்து வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பேருந்தின் சீட்டுக்கு கீழே கிடந்த தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அப்பகுதி பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com