\
‘அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கும் 7வது ஊதியக்குழு பரிந்துரைபடி சம்பளம்’ - புதுவை முதல்வர்

‘அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கும் 7வது ஊதியக்குழு பரிந்துரைபடி சம்பளம்’ - புதுவை முதல்வர்

‘அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கும் 7வது ஊதியக்குழு பரிந்துரைபடி சம்பளம்’ - புதுவை முதல்வர்
Published on

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய சிபிசிஇ பள்ளியின் திறப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், ‘புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது மட்டும் புதுச்சேரிக்கு 4.5 லட்சம் பேர் சுற்றுலா வந்துள்ளதாகவும் இதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம் உயர்ந்தது என்ற முதல்வர் நாராயணசாமி, தற்போது நாட்டில் மதத்தின் பெயரால் மக்களை பிரித்து பார்க்கும் எண்ணம் உருவாகியுள்ளது அதை தகர்த்தெரிய வேண்டும் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com