இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என அழைக்கக் கூறும் அரசாணை வெளியீடு

இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என அழைக்கக் கூறும் அரசாணை வெளியீடு

இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என அழைக்கக் கூறும் அரசாணை வெளியீடு
Published on
இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று பெயர் மாற்றப்பட்ட அரசாணை இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல எனவும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று மாற்றப்பட்ட அரசாணை இன்று வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com