\
கட்டாய கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்குக - தமிழக அரசு ஆணை

கட்டாய கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்குக - தமிழக அரசு ஆணை

கட்டாய கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்குக - தமிழக அரசு ஆணை
Published on

திருப்பிச் செலுத்தப்படாத கட்டாயக் கல்விக்கட்டணத்தை மாணவர்களுக்கு முழுவதுமாக வழங்க சுயநிதி கல்விநிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் சுயநிதி கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு திரும்பச் செலுத்தப்படாத அனைத்து கட்டாயக் கட்டணங்களை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்க ஆணையிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு மிகாமல் வழங்க 2017 ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆணையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு முன்னர் சுயநிதி கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com