தமிழ்நாடு
7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வணிக வரித்துறையில் ஏற்கனவே 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிக வரித்துறையை மறு கட்டமைப்பு செய்யும் விதமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஒசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய 7 இடங்களில் வணிக வரி நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் ஒரு கோட்டங்களாகவும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஒரு கோட்டங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 7 நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வணிகவரி செலுத்துபவர்கள் அக்கோட்டங்களில் வணிகவரி செலுத்த ஏதுவாக வணிக வரி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.