\
கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் - தமிழக அரசு

கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் - தமிழக அரசு

கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் - தமிழக அரசு
Published on: 
தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் இன்று முதல் இலையில் உணவு பரிமாறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களில் இலையில் உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் இன்று முதல் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை இலையிலும், கோயில்கள் மூடியிருக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொட்டலங்களில் கட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com