கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அரசு எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் அன்பரசன்

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அரசு எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் அன்பரசன்

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அரசு எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் அன்பரசன்
Published on

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை குன்றத்தூர் அருகே பரணிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 1000-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி ,பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

பின்னர், பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கொரோனாவின் மூன்றாவது அலை வந்தாலும் எந்த நெருக்கடியான நிலை வந்தாலும் திமுக அரசு அதனை எதிர்கொள்ள தயாரக உள்ளது என்றார். கடந்த ஆட்சியில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை என்ற அமைச்சர் தற்போது அனைத்து வசதிகளும் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அனைவரும் வீட்டிலேயே எளிய முறையில் ஆவி பிடிக்க வேண்டும் என அதற்கான மூலப் பொருட்களை கூறி விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com