\
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு
Published on: 

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மகள் விஜயஸ்ரீ இன்று காலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து  சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர் தேடியிருக்கின்றனர். அப்போது, வீட்டிற்கு அருகே ஓராண்டிற்கு முன் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 80 அடி ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட துளையில் விஜயஸ்ரீ சிக்கியிருப்பதை கவனித்து உள்ளனர்.  

உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்றாக திரண்டு நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்டனர். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருப்பதே இதுபோன்ற விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com