திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே பள்ளி படிக்கும் மாணவியை திருமணம் செய்ய பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள ஶ்ரீரெங்கராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்-நாச்சியார் தம்பதியினர். விவசாயி குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு இசக்கியம்மாள் (17) என்ற மகளும் மாரியப்பன்(15) என்ற மகனும் உள்ளனர். இசக்கியம்மாள் மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் +2 போதுத்தேர்வு எழுதி வருகிறார். 

இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு பெற்றோர்கள் திருமணம்செய்ய முடிவு செய்து வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இசக்கியம்மாள் மேல்படிப்பு படிக்கவேண்டும்என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர்கள் தொடர்ந்து திருமணத்திற்கு இசக்கியம்மாளை வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மணமுடைந்த இசக்கியம்மாள் நேற்று அதிகாலையில் வீட்டை விட்டு வெளிவந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து உடம்பில் மண்ணென்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நிகழ்விடத்திலேயே இசக்கியம்மாள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாங்குனேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த உதவி ஆய்வாளர் செல்வநாராயணன் இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com