காரில் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய கும்பல் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

காரில் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய கும்பல் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

காரில் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய கும்பல் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்
Published on

காரில் வந்து இருசக்கர வாகனம் திருடிய கும்பலை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (27) என்பவர், தனது இவரது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தோஷ், உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், காரில் இருந்து இறங்கி சர்வசாதாரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலம் குடியாத்தம் பகுதியில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து வருவதாகவும், இதனால் ரோந்து பணியை அதிகரித்து, சிசிடிவி கேமிராக்களை அதிகம் பொறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com