இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு

இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு
இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில், மத்திய அரசால் இலவச ரேசன் திட்டம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 4 முறை நீட்டிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த மாதத்துடன் இலவச ரேசன் திட்டம் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ள இலவச ரேசன் திட்டத்துக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பி.ஜி.ஆர். எனர்ஜி ஒப்பந்தம்: ஆதாரங்களைக் காட்டினால் விளக்கமளிப்பேன் - செந்தில் பாலாஜி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com