\
திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த வேண்டும் - ரஜினி ரசிகர்கள் கோரிக்கை

திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த வேண்டும் - ரஜினி ரசிகர்கள் கோரிக்கை

திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த வேண்டும் - ரஜினி ரசிகர்கள் கோரிக்கை
Published on

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ‌நடிகர் ரஜினி ரசிகர் மன்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில் முதல் அரசியல் மாநாடு திண்டுக்கல்லில் நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய, நகர ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் செயல் வீரர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.டி.பாணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட நிர்வாகிகள் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. எனவே ரசிகர் மன்றங்களை கிராமங்களில் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ரஜினியின் ரசிகர்கள் அரசியலுக்கு வரும் ரஜினியின் முதல் அரசியல் மாநாட்டினை திண்டுக்கலில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com