\
'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் நாளை முதல் முதல்வர் பரப்புரை

'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் நாளை முதல் முதல்வர் பரப்புரை

'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் நாளை முதல் முதல்வர் பரப்புரை
Published on

 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் நாளை முதல் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்முனைப்போடு செய்துவருகின்றன. இதனிடையே நேற்று சென்னையில் அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நாளை முதல் 31-ஆம் தேதி வரை ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் உட்பட அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com