அமளிக்கிடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

அமளிக்கிடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

அமளிக்கிடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு
Published on
அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் கணினி பொருத்தப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com