தமிழ்நாடு
"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது"- ஜெயக்குமார்
"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது"- ஜெயக்குமார்
ஒரு திரைப்படம் வெற்றியடைவதை வைத்து ஒருவரை தலைவராக ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு திரைப்படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலைத் தீர்மானிக்காது என்றும் மக்களுக்கு ஆற்றும் பணியை பொறுத்தே அவர்கள் தலைவர்களாக தீர்மானிக்கப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

