திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய  தீபத் திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய  தீபத் திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய  தீபத் திருவிழா

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருவிழாவையொட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18ஆம் தேதி மாலை பட்டாபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து 19ஆம் தேதி மாலை கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com