தமிழ்நாடு
தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் தந்தை, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க: ”தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமரோடு இருக்கின்றனர்”- ராகுல்காந்திக்கு பதிலளித்த அண்ணாமலை