திருப்பூரில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுமியின் தந்தையை போஸ்கோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன்- லதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சிறுமியின் தாய் லதா பனியன் கம்பனிக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் ரங்கநாதன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் நான்கு வயது குழந்தையை வாயில் துணியை வைத்து அடைந்து வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ரங்கநாதன் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் மர்ம உறுப்பு மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் ரத்த காயங்களுடன் அழுத நிலையில் மாடியிலிருந்து வந்த சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவை தட்டியுள்ளார். சிறுமி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையின் ரங்கநாதன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது, இதனையடுத்து போலீசார் ரங்கநாதனிடம் நடத்திய விசாரணையில், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் ரங்கநாதனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.