தமிழ்நாடு
துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளி மகனுடன் உணவின்றி தவிக்கும் குடும்பம்
துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளி மகனுடன் உணவின்றி தவிக்கும் குடும்பம்
சென்னையில் மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் குடும்பத்தினர் முழு முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ரயில் நிலைய சாலை பகுதியில் வசித்து வரும் ரேணுகாதேவியின் கணவர், கட்டட கூலி வேலைக்காக கும்பகோணம் சென்றுள்ளார். பொது முடக்கத்தால் ஊர் திரும்ப முடியாமல் அவர் அங்கேயே சிக்கிக் கொள்ள, ரேணுகா தேவியும் அவரது மாற்றுத்திறனாளி மகன், மகள், மாமனார் ஆகியோர் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.