தமிழ்நாடு
சூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்
சூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்
கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தில் சூரை மீன்களின் விலை குறைந்திருப்பதால் மீன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தேங்காய்பட்டணம், குளச்சல் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்று வரும் மீனவர்கள் தற்போது அதிகளவு சூரை மீன்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் கேரள மீன் வியாபாரிகள், சூரை மீன்களை வாங்க ஆர்வம் காட்டாததால், போதிய விலை கிடைக்கவில்லை என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதிகளவில் கிடைக்கும் சூரை மீன்களை கேரள மீன் வியாபாரிகள் வாங்காததால் அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் மீன்களின் விலை குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.