திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகள்!

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகள்!

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகள்!
Published on

திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மு‌தலமைச்சரும், ‌திமுகவின் ‌தலைவராக நீண்ட காலம் இருந்தவருமான மு. கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

விவசா‌யிகள்‌ நிறைந்த திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சட்டமன்றத் தொகுதி. இங்குள்ள தியாகராஜசுவாமி கோயில் திருவாரூருக்கு பெயர் சேர்க்கும் அதே நேரத்தில் சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஷியாமா சாஸ்திரிகள் அவதரித்த திருத்தலம் என்ற பெருமையும் திருவாரூருக்கு உண்டு. திராவிட இயக்கத்தின் தாக்கம் ‌அதிகம் நிறைந்த தொகுதி இது. விவசாயத்‌ தொழிலா‌ளர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ‌கட்சியும் இத்தொகுதியில் தனி செல்வாக்கு பெற்றுள்ளது. 

திருவாரூர் வட்டம் மற்றும் குடவாசல் வட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை தவிர்த்து பிற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியும், திமுகவுமே வெற்றி பெற்றுள்ளன. ஆண் ‌வாக்காளர்களை‌ விட பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருவாரூர். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போது திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ‌அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு கிடைத்தது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். 

உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி கருணாநிதி மறைந்ததை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com