தலைமைச் செயலகம்|அமைச்சர் ஐ பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!
தலைமைச் செயலகம்|அமைச்சர் ஐ பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!PT

தலைமைச் செயலகத்தில் சோதனை? அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறைக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.
Published on

தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது மகன் ஐ.பி செந்தில்குமார் பழனி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். திண்டுக்கலுக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். ஐ.பெரியசாமி வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தபோது, நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அமைச்சர் ஐ பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!
அமைச்சர் ஐ பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!pt

மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை என கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்திற்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்த முற்பட்டபோது அங்கிருந்த திமுக கட்சியினர் அதிகாரிகளை உள்ளே விடவில்லை பின்பு சுமார் 40 நிமிடங்கள் கழித்து CRPF வீரர்கள் வரவழைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினருக்கு சொந்தமான, மில்களில் காலை 7:30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை சோதனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் அறைக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com